எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

mbbs_fb__largeஎம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

தமிழகம் முழுவதுமுள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்று்ம் சென்னையில் உள்ள ஒரு அரசு‌ பல் மருத்துவ கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது WWW.TNHEALTH.ORG என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன்7-ஆம் தேதி கடைசி நாள். இதனை தொடர்ந்து ஜூன் 17-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 20-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top