489 மதிப்பெண் பெற்று பார்வையற்ற மாணவர் மாநிலத்தில் முதலிடம்

பார்வையற்ற மாணவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த கே.கிருஷ்ணகுமார் என்ற மாணவர் 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

பார்வைத்திறனற்ற மாணவர்களுகென்றே பிரத்யேக பள்ளிகளிலும், பிற பள்ளிகளிலும் இணைந்து பார்வையற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.கிருஷ்ணகுமார் 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த எம்.ராணி 470 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி ஏஆர்ஜிஎஸ்எஸ் பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளி மாணவி ஏ.ஜெனிதாமேரி 468 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top