டெல்லியில் விமான விபத்து!

air ambulance

டெல்லியில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக தரையிறக்கப்படும் போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி டெல்லியில் இருக்கும் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை கொண்டு சென்ற விமானத்தில் இருந்த ஏழு பேரில் ஐந்து பேர் பத்திரமாக இருப்பதாகவும், இருவருக்கு பலமாக அடிபட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக விமானிகளின் சாமர்த்தியத்தால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் விமானம் விபத்து நேராமல், திறந்த வெளியில் விமான விபத்து நடைபெற்றுள்ளது. விமானத்தில் இருந்த இரண்டு இன்ஜின்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது என்றும் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சனை தான் விபத்துக்கு காரணம் என்றும் தகவல்கள் தெர்விக்கின்றன. விபத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top