20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சங்ககரா, ஜெயவர்த்தனே ஓய்வு!

t20சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்றைய ஆட்டத்துடன் இலங்கையின் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே ஓய்வு பெற்றனர்.

கடைசி சர்வதேச இருபது ஓவர் போட்டியில் விளையாடிய இவர்கள், வெற்றியுடன் விடை பெற்றனர். இதுவரை சர்வதேச இருபது ஓவர் போட்டியில் சங்ககரா 56 போட்டியில் ஆயிரத்து 382 ரன்கள் எடுத்துள்ளார்.

மகிளா ஜெயவர்த்தனே 55 போட்டியில் ஆயிரத்து 493 ரன்கள் எடுத்துள்ளார்.நேற்றைய ஆட்டத்தில் மகிளா ஜெயவர்த்தனே 8வது ரன்னை கடந்த போது, இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

31 போட்டிகளில் 1016 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்ல் 807 ரன்களும், இலங்கையின் தில்சான் 764 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியா சார்பில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 585 ரன்கள் எடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top