புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

201605231022362881_JDU-opposes-Kiran-Bedi-appointment-as-Puducherry-Lt-Governor_SECVPFபுதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:–

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். இதே எதிர்ப்பை பாரதீய ஜனதாவும் தெரிவித்தது.

ஆனால் இன்று கிரண் பேடியை புதுவை மாநில கவர்னராக நியமித்து உள்ளனர். டெல்லியில் கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தினார்கள். அப்படிப்பட்டவரை இப்போது ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் இது நிச்சயமாக அரசியல் ரீதியான நியமனமே ஆகும்.

தங்களுடைய அதிகாரத்தை பாரதீய ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் சட்ட ரீதியான பதவிகளை இப்படி தவறாக பயன்படுத்துவது சரியானது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top