தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

201605231249000386_Vijayakanth-consulting-with-district-secretary-for-failed-in_SECVPFசட்டசபை தேர்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த மக்கள்நல கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அக்கட்சி 104 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியை தழுவியதோடு டெபாசிட்டையும் இழந்தார்

சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க அடுத்தகட்ட நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று ஒரு சில மாவட்ட செயலாளர்கள் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜயகாந்த் தேர்தல் தோல்வி, அடுத்தகட்ட நிலை குறித்து கேட்டறிந்தார். மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை அவர் தொடர்ந்து கேட்கிறார்,

மேலும் 3 நாட்களுக்கு அவர் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜகாந்தை சந்தித்து பேசினர்.

அப்போது மக்கள் பிரச்சினைக்காக இந்த கூட்டணி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர். ஆனால் தேர்தலில் தே.மு.தி.க தோல்வி அடைந்த பிறகு மாவட்ட செயலாளர்களை விஜயகாந்த் சந்தித்து பேசி இருப்பது சற்று ஆறுதலை கொடுத்து இருப்பதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top