முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

ஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தால் (ஹியூடா) இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இந்த ஆணையத்தின் தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா செயல்பட்டார்.

இந்த நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து மாநில ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில பாஜக அரசு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பூபிந்தர் சிங் ஹூடா மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. அதேவேளையில், தில்லி, சண்டீகர், குர்கான், கர்னால் உள்ளிட்ட நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top