விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்

மன்மோகன்

ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மன்மோகன் சிங்கின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிலிபித் மாவட்டம், பில்சந்தா காவல் நிலைய வரம்புக்குள்பட்ட கஜூரியா நவிராம் கிராமத்தில் வசிக்கும் மன்மோகன் சிங் என்ற விவசாயி, அருகிலுள்ள நந்த் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகளை வைத்துள்ளார். இந்நிலையில், வங்கிக் கடன் பெறுவதற்கு விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததால், அந்த விவசாயியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தகவல் அனுப்பியது.

விவசாயி மன்மோகன் சிங்கோ “விஜய் மல்லையாவுக்கு நான் உத்தரவாதம் அளித்ததாக தவறுதலாகப் புரிந்துகொண்டு எனது இரண்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கணக்கில் ரூ.12 ஆயிரமும், மற்றொன்றில் ரூ.4 ஆயிரமும் இருப்பு உள்ளது. எனக்கு மல்லையாவைப் பற்றியோ, அவரது நிறுவனத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது.

மும்பைக்கும், லக்னெளவுக்கும் கூட இதுவரை சென்றது கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது நிலம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்து, வங்கியில் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளேன். இதுதொடர்பாக, வட்டார அலுவலகத்திலிருந்து உத்தரவு பெற்று வங்கியில் அளித்தேன். அதையடுத்து, எனது வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top