வெற்றி நெருக்கடியில் மும்பை – குஜராத் இன்று மோதல்

201605211204395098_Crucial-match-between-MI-vs-GL-on-today_SECVPFரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 6 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் 5–வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் இன்று கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றியுடன் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டியது அவசியம். தோற்றால் வெளியேற்றப் படும்.

ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி எந்த பிரச்சினையும் இன்றி பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக தோற்றால் ரன்ரேட் பார்க்கப்படும். குஜராத்தின் ரன் ரேட் (–0.479) மோசமாக இருப்பதால் இன்று வெல்ல வேண்டியது அந்த அணிக்கு மிகவும் அவசியம். இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.

முன்னதாக மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் – முரளிவிஜய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இன்றைய போட்டியில் தோற்கும் அணி கடைசி இடத்தை பிடிக்கும். வெற்றி பெறும் அணி 7–வது இடத்தில் அமறும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top