இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை மாணவர்!

cbsc

12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை WWW.CBSERESULTS.NIC.IN என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 13 ஆயிரத்து 814 தேர்வில் பங்கேற்றுள்ளனர். இந்திய அளவில் டெல்லி மாண்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுக்ரிதி குப்தா 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சென்னை கே கே நகர் பத்மசேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த மாணவர் அஜீஸ் சேகர் 495 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

தேர்வு எழுதியவர்களில் 83.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 78.85 சதவீதமாகும். சென்னை உட்பட பத்து மண்டலங்களில் திருவனந்தபுரம் 97.61 சதவீதத்துடன் முதல் இடத்தைப் பிடிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top