ஆந்திராவை மிரட்டிய ரோனு புயல் – வங்காள தேசத்தில் இன்று கரையை கடக்கிறது

201605211122563153_Cyclone-Roanu-moving-towards-Bangladesh_SECVPFவங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

பின்னர் குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. ரோனு என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நெல்லூர் அருகே மையம் கொண்டு இருந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இந்த புயல் ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது ரோனு புயல் ஆந்திராவையும் கடந்து வங்காள தேசம் நோக்கி நகர தொடங்கி விட்டது. தற்போது ஒடிசா அருகே மையம் கொண்டு உள்ள ரோனு புயல் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வங்காள தேசத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.

இன்று மாலை வங்காள தேசம் சிட்டகாங் பகுதியில் கரையை கடக்கும் என ஐதராபாத் வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் காரணமாக ஒடிசாவில் பலத்த மழை பெய்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top