ஒபாமாவின் அழைப்பை ஏற்று ஜூன் 7-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

Modi-to-meet-Obama-address-US-Congress-next-month_SECVPF

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக ஜூன் 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்திக்கும் அவர், பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பால் ரியான் அழைப்பின்பேரில், அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் உரையாற்றும் 5-வது இந்திய பிரதமர் மோடி ஆவார்.

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, 2 நாட்கள் பயணமாக ஜூன் 4-ந் தேதி கத்தார் நாட்டுக்கு பிரதமர் செல்கிறார். அங்கிருந்து ஈரானுக்கு சென்று விட்டு அமெரிக்காவுக்கு செல்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top