வெளியான தரமணி டீசர்; எகிறும் எதிர்பார்ப்புகள் #Taramani

ram

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தரமணி டீசர் இன்று காலை பதினோரு மணிக்கு வெளியாகியுள்ளது. படம் மூன்று வருடங்களாக தயாரிப்பு பணியில் இருந்து வந்தாலும், கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த ராமின் மூன்றாவது படம் என்பதால் எதிபார்ப்புகள் அதிகமாக இருந்தது. மேலும், சில நாட்களாக வந்த போஸ்டர்கள் இன்னும் எதிர்பார்ப்பினை அதிகரித்தன. இது ஒரு பெண்ணின் காதல் கதை அல்லது ஒரு காதலை பெண்ணின் இடத்தில் இருந்து கூறும் படம் என்று போஸ்டரின் மூலம் கணிக்க முடிந்தது. தற்போது வெளியாகியுள்ள டீசரில் அது தான் உண்மை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், டீசர் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். டீசரின் முதலில் ஆண்ட்ரியா ஐ லவ் யூ என்று கூறுகிறார்; “ஒரு பொண்ணு ஐ லவ் யூ னு சொன்னா மொதல்ல என்ன கேப்பான்” எனறு டீசர் தொடங்குகிறது. அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு வரியும்….வேற லெவல். முக்கியமாக டீசரின் பின்னணியில் ராம் இன் குரலும் யுவனின் இசையும் செம்ம…. மேலும், தரமணி ராமின் மூன்றாவது படம்; ராமின் முதல் காதல் படம்; பெண்ணின் காதல் கதையை சொல்லும் படம்; புதுமையான டீசர்; என்று அனைத்தும் சேர்ந்து தரமணி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  படத்தில் ஆண்ட்ரியா ஜெரிமியா வும் வசந்த் ரவி என்கிற புதுமுக நடிகரும் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய காதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார்.

தரமணி டீசரை பார்க்க

https://www.youtube.com/watch?v=g2UTRys5iTw


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top