தமிழக சட்ட சபையில் 76 கோடிஸ்வர எம் எல் ஏக்கள்!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 812 எம்எல்ஏக்களில் 428 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலப் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஜனநாயக மறுமலர்ச்சி அமைப்பு ஆய்வு செய்து இத்தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் கோடீஸ்வர்கள் அதிக அளவு எம்எல்ஏக்களாகத் தேர்வாகியுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 83 சதவீத எம்எல்ஏக்கள் பெரும் பணக்காரர்கள் ஆவர். இதற்கு அடுத்தபடியாக தமிழக எம்எல்ஏக்களில் 76 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அஸ்ஸாமில் பேரவை உறுப்பினரானவர்களில் 57 சதவீதம் பேர் கோடிகளில் சொத்துகளை வைத்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கேரள எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர்.
இந்த கோடீஸ்வர எம்எல்ஏக்களின் பட்டியிலில் மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளது. அங்கு எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர்தான் கோடீஸ்வரர்கள் ஆவர்.
அனைத்து மாநிலங்களிலுமே பெரும் பணக்காரர்கள் எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் தமிழக எம்எல்ஏக்களில் 51 சதவீதம் பேர்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

அஸ்ஸாமில் இது 39 சதவீதமாகவும், கேரளத்தில் 25 சதவீதமாகவும், புதுச்சேரியில் 63 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 15 சதவீதமாகவும் இருந்தது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலுமே குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top