மனிதர்களின் ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு: ஐ.நா.

201605201513114648_Global-life-expectancy-up-five-years_SECVPFஉலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் தற்போது இருப்பதை விட மேலும் 5 ஆண்டுகள் கூடுதலாக நீடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவில் வாழும் மனிதர்களின் ஆயுட் காலம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. அங்கு குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை அதிகரிப்பு, மருந்து மாத்திரைகள் வினியோகம் உள்ளிட்டவையே முக்கிய காரணங்களாகும்.

அங்கு மலேரியா, எய்ட்ஸ் நோய்களுக்கு அதிக அளவில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அங்குள்ள மக்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

தற்போது சுவிட்சர்லாந்து ஆண்களும், ஜப்பான் பெண்களும் உலகில் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர். இனி கடந்த 2015-ம் ஆண்டில் பிறந்த குழந்தைகளில் ஆண்கள், சராசரியாக 96 வயது வரையிலும், பெண்கள் 71 வயது வரையும் உயிர் வாழ்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சியர்ரா நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் மிக குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top