தமிழினப்படுகொலையாளர்களை தப்பவைக்கிறதா இலங்கை அரசு?

2009 ல் தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளர்கள் சர்வதேசத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டுமென்று உலகமெங்குமுள்ள தமிழர்கள் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலக நாடுகளோ குறிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தனது நலன் சார்ந்து இலங்கையை காக்கவும் இனப்படுகொலையாளர்களை காக்கவும் தொடர்ந்து இலங்கையோடு சேர்ந்து தீவிரமாக வேலை செய்துவருகிறது.

 

gotabhaya-rajapakse-496x372அதில் ஒன்றுதான், இனப்படுகொலை குற்றவாளிகளை ஒவ்வொரு நாட்டின் தூதரக பொறுப்புகள் உள்ளிட்ட பெரிய பெரிய பொறுப்புகளில் அமர்த்திவிடுவது. ஒருவேளை இன்று இல்லாவிடிலும் நாளை குற்றவாளிகள் மீது ஏதாவதொரு விசாரணை வந்தால் பொறுப்புகளில் இருக்கும் இந்த குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதனால் தான் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவ உயரதிகாரிகள் உட்பட பலர் இன்று ஐநாவிலும் பல்வேறு நாடுகளிலும் அதிகாரிகளாக கடந்த ஏழு வருடங்களில் நியமிக்கப்பட்டு தப்பவைக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது எஞ்சியிருப்பது இராசபக்சேவும் அவரது தம்பியுமான கோத்தபயாவுமே.

இப்பொழுது இவர்களை காப்பற்றும் வேலைகளை தான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் துணையுடன் மறைமுகமாக இலங்கை அரசே செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் பொது வெளியில் இந்த இராசபக்சே கும்பலும் சந்திரிகா, இரணில் மற்றும் சிறீசேனா கும்பலும் சண்டை போடுவது போல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு அமெரிக்கா நினைத்திருந்தால் கோத்தபய இராசபக்சேவை என்றோ விசாரணை வலையத்துக்குள் கொண்டுவந்திருக்க முடியும் ஏனென்றால் கோத்தபய அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர். அமெரிக்க சட்டப்படி அவரை விசாரணை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு
ஆனால் இலங்கை அரசு எங்கள் நாட்டிலுள்ளவரை தண்டிக்க எந்த நாட்டுக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிவிட்டது என்ற சொத்தை காரணத்தை சொல்லி இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. மேலும் கோத்தபயவை கைது செய்து விசாரிக்க வேண்டுமென்று ஓபாமாவுக்கான தமிழர் அமைப்புகள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிற சூழலில் தீடிரென்று சில வாரங்களுக்கு முன் கோத்தபயவை இரகசியமாக அழைத்து பேசியிருக்கிறது அமெரிக்கா. என்ன பேசியதுன்னு இதுவரை அமெரிக்கா சொல்லவில்லை http://srilankabrief.org/2016/05/secret-behind-gotas-sudden-us-visit-arrest-of-ram/ . இதெல்லாம் எதிரும் புதிருமாக இருக்கும் இலங்கையை ஆளும் இரணில் சிறிசேன அரசுக்கு தெரியாமல் நடக்கவில்லை தெரிந்தே தான் திரைமறைவில் நடக்கிறது. இதற்கு இலங்கை அரசும் உடந்தைதான் என்பதற்கு சான்று இலங்கையின் பொது நிறுவனங்களின் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தமிழ் அமைப்புகள் வைத்த கோரிக்கை தொடர்பாக போனமாதம் ஏப்ரல்24’2016ல் கொடுத்த அறிக்கையில்
//இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவரை விசாரிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது. அதை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. “We will not allow a domestic issue to be dealt with internationally owing to outside pressure. http://colombogazette.com/2016/04/24/sri-lanka-does-not-support-calls-for-the-us-to-arrest-gotabaya/

இது ஒருபுறமென்றால் மறுபுறம் கடந்த வாரம் உகாண்டாவின் புதிய பிரதமராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றுள்ள சர்வாதிகாரி யோவேரி முசவேனியின் (Yoweri Museveni) பதவியேற்பு விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இலங்கையின் பிரதிநிதியாக இராசபக்சேயும் கலந்து கொண்டுள்ளார்.

5252

இந்த பதவியேற்பு விழாவில் சூடான் நாட்டின் அதிபர் உமர் அல் பசிர் கலந்துகொண்டதை பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்தன. ஏனென்றால் உமர் அல் பசிர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்குற்ற விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த சமயத்தில் பல்வேறு நாட்டின் தூதர்கள் அதிபர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் அவரும் கலந்துகொண்டு தனக்கு சாதகமாக மேற்சொன்ன நாடுகளை மாற்றுவதற்கான வேலைகள் நடக்கவாய்ப்பிருக்கிறது என்று அதனை கண்டித்தார்கள். ஆனால் அதே போல ஒரு இனப்படுகொலையை தமிழருக்கெதிராக நடத்திய இராசபக்சே கலந்து கொண்டதை எந்தநாடோ அல்லது மனித உரிமை அமைப்போ கண்டிக்கவில்லை. இதில் உமர் அல் பசிராவது சூடானின் அதிபர் என்ற போர்வையில் கலந்துகொண்டார். ஆனால் இராசபக்சே எந்தவிதத்தில் அதில் கலந்து கொண்டார்.

இதனை கேள்வியாக இப்போது ஆளும் சிறிசேன அரசிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது. அந்த பதவியேற்பு விழாவில் அவர் தனிப்பட்ட ரீதியில் கலந்து கொண்டார் என்று பதிலளித்திருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் கலந்துகொண்டார் என்றால் அப்போ இலங்கையின் சார்பாக சென்ற பிரதிநிதி யாரென்றும்? இல்லை பதவியேற்பு விழாவிற்கு இலங்கையோடு நட்புறவில் இருக்கும் உகாண்டா இலங்கையை அழைக்கவேயில்லையா? என்று கேள்வியை எழுப்பினாரகள். அதற்கு அழைப்பு வந்தது என்று மட்டும் பதில் சொன்ன இலங்கை அரசு மேற்கொண்டு இதுகுறித்து ஏதும் பேசமறுக்கிறது. ஆனால் உண்மை இப்போது வெளிவந்திருக்கிறது. அதாவது இராசபக்சேவை அந்த பதவியேற்பு விழாவிற்கு அனுப்பியதே ஆளும் சிறீசேனா அரசில் மங்கள சமரவீரா இருக்கும் வெளிவிவகார துறைதான். இராசபக்சேவுக்கான பயண சீட்டு ஏற்பாடுகள் செலவுகள் என அனைத்தையும் ஆளும் அரசே செய்திருக்கிறது. இதனை மறைப்பதற்கு தான் கடந்தவாரம் இராசபக்சேவை குற்றஞ்சாட்டி ஒரு திறந்த மடலை மங்கள சமரவீரா இராசபக்சேவுக்கு எழுதியிருந்தார்.http://www.slguardian.org/2016/05/secret-behind-mahindas-uganda-invitation/

வழக்கம்போல இலங்கை அரசே இராசபக்சேவை குற்றவாளியென்று சொல்லி விட்டதென்று சொல்லி நம்மை திசைதிருப்பிவிட்டுவிட்டு மறுபக்கம் இனப்படுகொலையாளர்களான இராசபக்சே மற்றும் அவனது தம்பி கோத்தபயவை காப்பாற்றும் வேலைகளை திரைமறைவில் செய்து வருகிறது சந்திரிகா, இரணில், சிறிசேனா தலைமையிலான ஆளும் அரசு.

—  கொண்டல் சாமி 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top