தோல்வியைத் தழுவிய தலைவர்கள்

திருமாவளவன்

இந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் கட்சியின் தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அவர்கள் :

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் இரண்டாவது இடத்துக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் மூன்றாவது இடத்துக்கும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் இரண்டாவது இடத்துக்கும் தள்ளப்பட்டு தோல்வியைத் தழுவினர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் வை விட 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் 12,497 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும், தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான கேப்டன் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெப்பாசிட் இழந்து தோல்வியைத் தழுவினார். ஓட்டபிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். பச்சைத் தமிழகம் கட்சியில் தலைவர் சுப.உதயகுமார் 4891 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

காட்டுமன்னார்கோயிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால், அவருக்கு விழுந்த 102 தபால் ஓட்டுக்கள் செல்லாது என்று எண்ணப்படவில்லை என்றும் அதிமுக வின் அதிகார பலத்தால் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல், திருமாவளவன் என்ற பெயரில் அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு 289 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top