முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

தமிழர்

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழர் விடியல் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது.

அவர்கள் செய்தியாளர்கள் முன் பேசியது “இனப்படுகொலை செய்வது இலங்கை அரசாக இருந்தாலும், அதற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்தது இந்திய பார்ப்பனிய அரசு. இந்திய அரசு அதிகாரிகளான எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன், பிரணாப் முக்கர்ஜி உள்ளிட்டோர் இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றினர். அனைத்து தேசிய கட்சிகளின் சம்மதத்தோடு இது நிகழ்ந்தது.

இவர்களை கண்டித்தும், பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு துணைபோன இந்திய அரசை விசாரிக்க வலியுறுத்தியும், இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்” என்று கூறினார்கள். மேலும், முற்றுகை போராட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.டைசன் மற்றும் உ. இளமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோர் படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 70 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top