சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அரை மணி நேரத்தில் செல்லமுடியும்!

hyperl

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அரை மணி நேரத்தில் செல்லமுடியும் என்றால் நம்மால் நம்ப முடியுமா? ஆனால் இதுவும் சாத்தியமே என்கிறது எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பம். 2013 இல் எலன் முஸ்க் ( Elon Musk )சமர்ப்பித்த எதிர்கால போக்குவரத்திற்கான தொழில்நுட்பம் இன்று அதற்கான மாதிரி செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் “ஹைப்பர்லூப் போக்குவரத்து” (Hyperloop) என்று அழைக்கபடுகிறது.

இன்று அமெரிக்காவின் நவேடா பாலைவனத்தில் இதற்கான சோதனையோட்டம் நடைபெறவிருக்கிறது. முற்றிலும் குழாய்கள் வடிவத்தில் அமைந்த அமைபின் உள்ளே ஒரு கேப்சூல் வடிவ பெட்டிகளில் இருக்கைகள் அமைக்கப்படும். முற்றிலும் காந்தபுலத்தின் சக்தியையும் சிறிய அளவில் மின்சாரத்தின் சக்தியையும் கொண்டு வடிவமைக்கபட்ட இந்த பெட்டிகள், குழாய்களின் உள்ளே செயற்கையாக உருவாக்கப்படும் ஈர்ப்பு விசையையும் , காந்தபுல ஈர்ப்பு விசையையும் கொண்டு பெட்டிகளை அதிவேகத்தில் முன்னோக்கி உந்தி செல்கிறது. இந்த வகை தொழில் நுட்பத்தில் சிறிதளவு புகையோ அல்லது கழிவுகளோ முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் ட்ரான்ஸ்போர்டேசன் டெக்னாலஜிஸ் ( Hyperloop Transportation Technologies) நிறுவனம் இதற்கான வடிவமைப்பையும், செயல்பாட்டையும் வணிகப்படுத்தும் வகையில் விரைவில் அமெரிக்காவில் நீண்ட தூரத்திற்கு குழாய்களை நிறுவப்போகிறது. காந்தப்புலத்தில் மிதக்கும் இந்த தொழில்நுட்பம் இன்று வெற்றிகரமாக நிரூபிக்கும் பட்சத்தில் போக்குவரத்திற்கான தொழில்நுட்ப சாதனையில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படும்.2020ம் ஆண்டிற்குள் பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த தொழில்நுட்பத்தை உபயோகித்து போக்குவரத்தை எளிமைபடுத்த அங்கு திட்டமிட்டிருகிறார்கள் .

சோதனையோட்டம் நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பபடுகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் அடுத்த தேர்தல் அறிக்கையில் இந்த தொழில்நுட்பம்இடம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை!

1897இல் நியூயார்க் நகரில் கடிதங்கள் அனுப்புவதற்கு இந்த வகை தொழில்நுட்பத்தை ஏற்கனவே அவர்கள் பரிசோதித்து வெற்றிகரமாக உபயோகித்திருக்கிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்பம் காந்தபுலத்தை பயன்படுத்துகிறது என்றால் அப்போது அந்த தொழில்நுட்பம் காற்றின் அழுத்தத்தினால் இயங்கியது .பிறகு பயன்பாட்டிற்கான செலவு அதிகரித்ததால் அதனை கைவிட்டிருகிறார்கள். அப்பொழுது உயிருள்ள ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக சோதித்த பிராணி ஒரு கருப்பு பூனையாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top