கெய்ல் சாதனையை முறியடித்தார் கோலி

virat

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 2012–ம் ஆண்டில் 733 ரன்களும் (15 ஆட்டம்), சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்சி 2013–ம் ஆண்டில் 733 ரன்களும் குவித்ததே ஒரு ஐ.பி.எல். தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

அச்சாதனையை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி நேற்று தகர்த்தார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் நொறுக்கியதன் மூலம் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 752 ரன்களாக (12 ஆட்டம்) உயர்ந்துள்ளது. இதில் 3 சதமும், 5 அரைசதமும் அடங்கும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top