அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க கோரி நேபாளத்தில் மாதேஸிகள் மீண்டும் போராட்டம்

nepal

நேபாளத்தில் கூடுதல் உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க ஏதுவாக அரசமைப்பு சட்டத்தை திருத்தக் கோரி மாதேஸி களும், பிற சிறுபான்மையினரும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் நோக்கி 2-வது நாளாக பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் தடுக்க முயற்சித்ததால் மோதல் வெடித்தது.

இந்தியாவில் இருந்து நேபாளத் தில் குடியேறியவர்கள் மாதேஸிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்களை தவிர அந்நாட்டில் காலங்காலமாக வாழ்ந்து வரும் தலித்துகள் உள்ளிட்டோரும் சிறு பான்மையினராக உள்ளனர். நேபாளவாசிகளுக்கு வழங்கப்படும் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, அதற்காக அரசியல் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மாதேஸிகள் போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த போராட்டத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வழியிலேயே நிறுத்தப்பட்டதால் நேபாளத்தின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாதேஸிகள் தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 2-வது நாளான நேற்று தங்களது கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி நேபாள பிரதமர் அலுவலகம் நோக்கி மாதேஸிகளும், பிற சிறுபான்மையின அமைப்பினரும் பேரணி நடத்தினர். வழியில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்துக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதையடுத்து கலவரத் தடுப்பு போலீஸார், போராட்டக் காரர்களை கலைக்க தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாய மடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நேபாள பிரதமர் கே.பி.ஒளிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top