திருப்பூரில் தேர்தல் ஆணையம் பிடித்த ரூ.570 கோடி பணம் கோவைக்கு கொண்டு செல்லப்படுகிறது

201605161802355646_Rs570-crore-cash-transports-from-tirupur-to-coimbatore_SECVPFகோவையில் இருந்து திருப்பூர் வழியாக 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் பறிமுதல் செய்தது. மூன்று கண்டெய்னர் லாரிகளும் பணத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. ஆந்திராவில் பணம் தட்டுப்பாடு உள்ளதால் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கோவையில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்கான ஆவணங்களை கொடுத்தது. இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 3 கண்டெய்னர் லாரிகளை மீண்டும் கோவைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி 3 கண்டெய்னர் லாரிகளும் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டுசெல்லப்பட்டு, ஸ்டேட் வங்கி அளித்துள்ள ஆவணங்களை வைத்து பணம் எண்ணப்படும். இதில், தேர்தல் ஆணையம் திருப்தி அடைந்தால் அதன்பின்னர் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top