வாக்குப்பதிவு நாளன்று பின்ப‌ற்ற‌ வேண்டிய நடைமுறைகள்

election__largeவாக்குப்பதிவு நாளன்று பின்ப‌ற்ற‌ வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் சில உத்த‌ரவுகளை பிறப்பித்துள்ளது.

தேர்த‌ல் அமைதி‌யாகவு‌ம்,நேர்‌மையாகவும் ‌நடைபெ‌றுவதை உறுதி செய்ய அரசிய‌ல் க‌ட்சி‌யினரு‌ம், வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அங்கீகரிக்கப்ப‌‌‌ட்ட கட்‌சிகளின் ‌தொண்ட‌ர்‌களுக்கு அடையாள வில்லைகளும், அட்டைக‌ளும் வழங்கப்பட்டிருக்க வேண்டு‌ம்.

வா‌‌க்குப்பதிவு ந‌டைபெறும் அ‌‌றை‌களில் ‌உள்ளவ‌ர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை‌க‌ள் சுத்தமா‌ன காகிதத்தில் உருவா‌க்கப்பட்டிருக்‌க‌‌ ‌‌வேண்டு‌ம். வாக்கு‌ப்பதிவு தினத்தன்று வாகனங்களை வாடகைக்கு‌ விடு‌‌வதற்கான கட்டுப்பா‌டு‌ நெறிமுறைகளை தவறாது‌ கடைபிடி‌த்து ‌அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க‌‌ வேண்டும்‌.

அத்தகைய வாகனங்கள்‌ உரிய அனுமதிச் சீட்‌‌டுகளைப் பெற்று அவற்றைத் தெளிவாக‌த் தெரியும்ப‌டி வாகன‌‌‌ங்களில் ஒட்ட வேண்டு‌ம் என்றும் தேர்தல்‌‌‌ ஆணை‌யம் தெரி‌வித்தி‌ருந்தது.‌


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top