கில்லர் பேட்டிங்: டி வில்லியர்ஸ், கோலி சதம் குறி்த்து டுவிட்டரில் பிரபலங்கள் புகழாரம்

201605141947031547_Killer-batting-de-Villiers-Virat-Kohli-century-regarding_SECVPFபெங்களூரில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 52 பந்தில் 10 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். விராட் கோலி 55 பந்தில் 5 பவுண்டரி 8 சிக்சருடன்  109 ரன்கள் குவித்தார். இருவடைய அபார ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இருவரும் சேர்ந்து 20 சிக்சர்கள் விளாசினார்கள்.

இருவருடைய ஆட்டத்தையும் பார்த்து டுவிட்டரில் பிரபல வீரர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

ஹர்பஜன் தன் டுவிட்டரில் ‘‘இரு சாம்பியன்களும் கில்லர் பேட்டிங் செய்தனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங், “ஏ.பி. பேபி நீங்கள் ஒரு லிஜென்ட்’’ என்று குறிப்பிட்டுள்ளார். விக்ரதம் சந்த்ரா என்பவர் ‘‘உலகத்தரம் வாய்ந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்துள்ளனர். இதுவரை இதுபோன்ற சிறந்த பார்ட்னர்ஷிப் உண்டா?’’ என்று எழுதியுள்ளார்.

முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் ‘‘விராட் மற்றும் ஏபிடி ஆகியோர் ரசிகர்களுக்கு சிறந்த விருந்து படைத்தனர். நம்பமுடியாத வகையிலான பேட்டிங். விராட் மற்றும் ஏபிடி-க்கு நன்றி’’ என்று கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் ‘‘இதை பார்க்கும்போது மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் ஒரே அணியில் விளையாடியது போன்று உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அல்பி மோர்கல் ‘‘நான் பெங்களூர்- குஜராத் போட்டியைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது அடுத்த தலைமுறை கிரிக்கெட்’’ என்று பதிவு செய்துள்ளார்.

யூசுப் பதான், ‘‘டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top