ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

pasil rajapaksha

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை தொடர்பாக இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கொழும்பு போலீஸ் குற்ற புலனாய்வு துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க சென்றார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மாத்தரை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு யரேஷா, சி திவ்வா முன்பு ஆஜார் படுத்தப்பட்டார். அப்போது கடும் நிபந்தனைகளுடன் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் பசில் ராஜபக்சேவின் பாஸ் போர்ட்டை முடக்கி வைக்கவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதித்தார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை நிதி மோசடி குற்றப்புலனாய்வு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சே நிலப்பிரச்சினையை காரணம் காட்டி கைது செய்யப்பட்டிருப்பதில் வேறு காரணம் உள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கை அரசை கவிழ்க்க பசில் ராஜபக்சே தொடர்ந்து முயன்று வந்தார். அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரது அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பசில் ராஜபக்சே மனைவி புஷ்பா, அவது மகள் தேஜானி ஆகியோருக்கும் அதிபர் ஆணைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, அவர்கள் இருவரும் நேற்று ஆணையம் முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராக வில்லை. எனவே இன்று ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top