பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

201604091210421758_Vijay-Mallya-seeks-time-till-May-to-appear-before-ED_SECVPF

தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகைகளை வசூல் செய்யும் வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.9,600 கோடி கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால், அவர் பிரிட்டனில் இருப்பதால் இந்த வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், வெளிநாடுகளில் மல்லையா வாங்கியுள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகையை வசூலிக்கும் விதமாக, விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக கோவா மாநிலம், பனாஜியில் உள்ள அவரது சொகுசு பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. இதுகுறித்து அந்த வங்கியின் வழக்குரைஞர் விகாஸ் குமார் கூறுகையில், “அந்த பங்களாவானது பாரத ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இனி அந்த பங்களாவுக்குள் யாரும் செல்ல முடியாது’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top