பணம் வாங்கியதாக கூறி பெண்ணிடம் அத்துமீறிய திமுகவினர்

சென்னை பூக்கடை பகுதியில் வாக்குக்குப் பணம் வாங்கியதாகக் கூறி, பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுகவினர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிராட்வே, பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பூ வியாபாரம் செய்து வருபவர் லட்சுமி. இவர் அந்தப் பகுதியிலேயே சாலையோரத்தில் தங்கியிருந்து, வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை இரு நபர்கள், லட்சுமியிடம் தாங்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறினராம். மேலும் அவர்கள், அதிமுகவினரிடமிருந்து வாக்கு அளிப்பதற்கு பணம் வாங்கினீர்களா என கேட்டனராம். ஆனால் லட்சுமி, தான் பணம் ஏதும் வாங்கவில்லை என தெரிவித்தாராம்.

ஆனால், அதை ஏற்க மறுத்த அந்த நபர்கள், லட்சுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து லட்சுமி, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top