அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

201604281407391339_Supreme-Court-reserves-order-in-petition-for-holding-of-NEET_SECVPF

அவதூறு வழக்கு தொடர்வதற்கான சட்டப்பிரிவு சரியே. அவற்றை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

அவதூறு வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோரின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசியல் தலைவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்வதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்மன் அனுப்பும் போது நீதிபதி கவனமாக இருக்க வேண்டும். சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்லலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அனைவருக்கும் எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், 8 வாரங்களுக்குள் அனைவரும் தங்கள் மீதுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய  உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top