கவுகாத்தி ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு: காதணி, மோதிரம் அணிந்து வர மாணவர்களுக்கு தடை

201605121451379590_Students-not-allowed-to-wear-earrings-ring-in-IIT-entrance_SECVPFஅசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காதணி, மோதிரம் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்வியில் சேருவதற்கான நுழைவு தேர்வு வருகிற 22–ந் தேதி நடக்கிறது. 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் நுழைவு தேர்வு எழுதுகிறார்கள்.

ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத், மெகபூப் நகர், வரங்கல் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களில் 23 ஆயிரம் பேர் தேர்வு செய்கிறார்கள்.

தேர்வு எழுதும் மாணவ– மாணவிகளுக்கு தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதன்படி மாணவ– மாணவிகள் காதணி, மோதிரம், பிரேஸ்லெட், தாயத்து போன்ற உலோக ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது.

ஆண்கள் முழுக்கை சட்டை, ஜெர்கின் அணிந்து வரக்கூடாது. உடைகளில் பெரிய பட்டன் இருக்க கூடாது. அரைக்கை சட்டை, டீ–சர்ட், குர்தா அணிந்து வரலாம்.

சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். ஷூ, ஹை ஹீல்ஸ் செருப்பு அணிய கூடாது. கைக்கடிகாரம், செல்போன், லேப்டாப் ஆகியவை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. 30 நிமிடத்துக்கு ஒருமுறை நேரம் சொல்லப்படுவதால் கடிகாரம் கட்டி வரக் கூடாது எனறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது. மேற்கண்டவை உள்பட பல கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top