தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ல் தேர்தல்

201605121620271240_Polls-for-vacant-RS-seats-on-June-11_SECVPFதமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ல் தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட், தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதேபோல் மேலும் 14 மாநிலங்களில் 51 எம்.பி. பதவிகள் காலியாகின்றன.

எனவே, மேற்குறிப்பிட்ட 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top