மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

mallya__largeதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று அமலாக்கத் துறை இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இது நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று வழிகளில் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் அல்லது தேடப்படும் நபர் வெளிநாட்டில் பதுங்கியிருந்தால் அவரை உரிய நாட்டிடம் ஒப்படைக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடைமுறையை இன்டர்போல் பின்பற்றுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top