அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: மேற்கு விர்ஜீனியாவில் ஹிலாரி தோல்வி

201605111503533722_Bernie-Sanders-wins-presidential-primaries-in-West-Virginia_SECVPFஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி அங்கு புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒவ்வொரு மாகாணங்களில் நடந்து வருகின்றது.

குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் முன்னணியில் உள்ளனர். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அறிவிக்கபட்டு விட்டார். ஆனால் ஜனநாயக் கடசியில் ஹிலாரி கிளிண்டனுக்கு தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை அதேகட்சியை சேர்ந்த பெர்னி சேண்டர்ஸ் தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார்.

எனினும், அக்கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக மொத்தம் 2,383 ஓட்டுகள் தேவை என்ற நிலையில் இன்னும் 155 ஓட்டுகளே தேவை என்ற நிலையில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்து வருவது, குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top