தோட்டத்துக்குள் புகுந்த குட்டி யானை

elephant

பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவாலா கைதக்கொல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் 6 மாதம் மதிக்கத்தக்க பெண் யானை குட்டி சத்தம் போட்டபடி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து அங்கும் இங்கும் சத்தம் போட்ட படி குட்டி யானை சுற்றி வந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவாலா வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மனோகரன், வனவர் கேசவன், வனக்காப்பாளர் மில்டன் பிரபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தாயை பிரிந்து வழிதவறி வந்த யானை குட்டியை மீண்டும் தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் போராடினர். சுற்று வட்டார பகுதி மக்கள் வாகன ஒட்டிகள் அப்பகுதியில் திரண்டதால் குட்டி யானை மக்கள் கூட்டத்தை கண்டு மிரண்டது.

இதனால் வனத்துறைக்கு யானை குட்டியை வனப்பகுதிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மக்கள் கலைந்து சென்ற நிலையில் குட்டி யானைக்கு தண்ணீர் கொடுத்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்நிலையில் மீண்டும் அந்த குட்டி யானை நேற்று இரவே மீண்டும் தோயிலை தோட்ட பகுதிக்குள் புகுந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானை மேலும் வழிதவறி எங்கும் செல்லாமல் இருக்கவும், தாய் யானை இதனை தேடி வரும் வரை பிரத்தேயக கூண்டில் அடைக்க ஏற்பாடு செய்து, கிரால் என்ற கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து அந்த குட்டி யானைக்கு தண்ணீர் உணவு ஆகியவற்றை வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top