விஜய் மல்லையாவை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் : இங்கிலாந்து

Vijay-Mallya-to-disclose-his-assets-by-April-21_SECVPF

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. ஆனால் மல்லையாவிற்கு எதிராக குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்தியாவிடம் அவரை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளதாக பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது. பிரிட்டன் அரசின் இந்த முடிவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் முடிவு விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடன் ஏய்ப்பு செய்து விட்டு லண்டனுக்கு தப்பிய மல்லையாவின் பாஸ்போர்ட்டை அரசு முடக்கி உள்ளது. லண்டனில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது.

எனவே மல்லையாவை இங்கிலாந்தில் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் இந்த  கடிதத்திற்கு பிறகு லண்டனிலிருக்கும் மல்லையா கட்டாய நாடு கடத்தலுக்கு உட்படுத்தப்பட்டதால் தற்போது இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top