தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை!

ராஜேஷ் லக்கானிசட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் வரும் 14, 15, 16 மற்றும் 19ம் தேதிகளில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தமிழக அதிகாரிகளுடன்  காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது  14, 15, 16 என மூன்று நாட்களும், வாக்கு எண்ணிக்கையின் போது 19ம் தேதி ஒருநாளும் என நான்கு நாட்களுக்கு மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடவும்,  மே 15 மற்றும் 16  தேதிகளில் மாநில எல்லைகளை தீவிரமாக  கண்காணிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 25 பறக்கும் படையினர் கண்காணிப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் லக்கானி தெரிவித்துள்ளார். நேற்று வரை 61 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாகவும், வழங்கப்படாத பூத் சிலிப்கள் மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமே ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. You can always tell an expert! Thanks for corngibutitn.

Your email address will not be published.

Scroll To Top