கேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

201605101530267314_Resolution-against-PepsiCo-by-Kerala-village-panchayat_SECVPFகேரளா மாநிலம் கோழிகோடில் பெப்சிகோ நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதுஸ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிபோன்ற சூழ்நிலையானது நிலவுவதை தொடர்ந்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோழிகோட்டில் தொழில்துறை பகுதியில் பெப்சிகோ நிறுவன தொழிற்சாலை உள்ளது. பஞ்சாயத்து நிர்வாக கமிட்டி தீர்மானத்தில் பெப்சிகோ நிறுவனம் இப்பகுதியில் தன்னுடைய தொழிற்சாலை செயல்பாட்டை மூன்று மாதங்களுக்கு நிறுத்தவேண்டும், இப்போது நிலவும் சூழ்நிலையில் அதிகமான நிலத்தடி நீரை சுரண்டிக் கொள்ளக்கூடாது என்று கூறிஉள்ளது.

தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பஞ்சாயத்து கமிட்டியின் மொத்தம் 23 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். விரைவில் இதுதொடர்பான நோட்டீஸ் பெப்சிகோ நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நிலத்தடி நீரை உறிஞ்ச கூடாது என்று அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் அவர்கள் இதுவரையில் பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ஒருநாளைக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் எடுக்கவேண்டும் என்ற வரம்பையும் மீறி பெப்சிகோ நிறுவனம் அதிகமான நிலத்தடி நீரை எடுக்கிறது என்று தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top