24 தொகுதிகளில் துணை ராணுவம் அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

201605101300043999_Conduct-of-TN-assembly-election-peaceful-military-parade-in_SECVPFதமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீசார் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளும் மாநகர எல்லையையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 தொகுதிகளும் சென்னை மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்த தொகுதிகள் அனைத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அசுதோஷ்சுக்லா மேற்பார்வையில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று 24 தொகுதிகளிலும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 12 கம்பெனிகளை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட துணை ராணுவபடை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி அணிவகுத்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top