தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை: ஜே.பி. நட்டா

nadda

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த இங்குள்ள அரசு ஒத்துழைப்பதில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திமுகவும், அதிமுகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை. மாறாக மதுபானக் கடைகளை திறப்பதில்தான் கவனம் செலுத்தியுள்ளன. இவ்விரு கட்சிகளும் ஊழலில் சாதனை படைப்பதில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிலத்தை தேர்வு செய்து தரும்படி கேட்டோம். இதுவரை தமிழக அரசு நிலம் தரவில்லை.

ஒரு மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தும் விபத்துக் காப்பீட்டு திட்டம், சிறுதொழில் கடன்கள் வழங்கும் பிரதமரின் “முத்ரா யோஜனா’ திட்டம், நடுத்தர குடும்பத்தினருக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எதிலும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை. இதனால் மக்களிடம் மோடி அரசின் திட்டங்களை நேரடியாக கொண்டு செல்ல முடியவில்லை. இவற்றை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம். எனவேதான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். அதற்காக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

பரமக்குடி-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை அமைக்க அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசுவேன். மாநில அரசு பாஜக அரசாக இருந்தால்தான் அனைத்து திட்டங்களையும் வேகமாக செயலாக்க முடியும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top