மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன்

201605100813185493_Madrid-Open-tennis-Djokovic-Champion_SECVPFமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிச், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச் வென்ற 29-வது பட்டம் இதுவாகும். ஓபன் எரா ஒட்டுமொத்தத்தில் அவர் கைப்பற்றிய 64-வது ஒற்றையர் பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் ஓபன் எராவில் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பீட் சாம்பிராஸ் (அமெரிக்கா), ஜோர்ன் பர்க் (சுவீடன்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார்.

அத்துடன் மாஸ்டர்ஸ் தொடரில் அதிக ஒற்றையர் பட்டம் வென்று இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை (28 பட்டங்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். ‘பீட் சாம்பிராசின் சாதனையை எட்டி பிடித்து இருப்பது அற்புதமானது’ என்று ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் ஜோகோவிச் வென்ற 5-வது பட்டம் இதுவாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top