நியூட்ரீனோ விற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட முகிலன் மீது காவல்துறை தாக்குதல்

13177171_1251963551505192_8375399767096139291_n 13179244_1251983948169819_6045529369158981432_n

நியூட்ரினோ திட்டத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தோழர் முகிலன் அவர்களை காவல்துறை கடுமையாக தாக்கி கைது செய்து பொய் வழக்குகளையும் போட்டுள்ளது.

தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்காத கட்சிகளை தோற்கடிப்போம் என்ற வேலைத் திட்டத்தோடு நேற்று (08.05.2016) தேனி மற்றும் போடி பகுதிகளில் பரப்புரை இயக்கத்தை துவங்கி இருக்கிறார்கள். காலை தேனி கிருஷ்ணா திரையரங்கம் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்புடன் பரப்புரை துவங்கி இருக்கிறது. பரப்புரையின் தொடர்ச்சியாக போடி பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணியளவில் துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த காவல்துறை அத்துமீறி தோழர் முகிலன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளது. மேலும் பரப்புரையை முடக்கும் வகையில் தோழர் முகிலன், உட்பட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுகட்டாயமாக கைது செய்து, பொய் வழக்கு போட்டுள்ளது.

தேர்தலில் எந்த கட்சியும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளைப் பற்றி பேசாத நிலையில், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க நடக்கும் சில நிகழ்வுகளின் மீதும் மிகப்பெரிய ஒடுக்குமுறையினை இந்த அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top