மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் – மத்திய அரசு பரிந்துரை

201605091520337823_NEET-Big-day-today--Supreme-Court-to-pass-order-on-fate-of_SECVPFஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11–ந்தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழகம், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி கூட்டமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

மேலும் 2016–17 கல்வி ஆண்டில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்கும் வகையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசும் முறையிட்டது.

இதுகுறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் ஏற்கனவே அறிவித்தபடி மே 1–ந்தேதியும் ஜூலை 24–ந்தேதியுமாக 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

அதன்படி முதற்கட்ட நுழைவுத் தேர்வை கடந்த 1–ந்தேதியன்று சி.பி.எஸ்.இ. நடத்தி முடித்தது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் எழுதினர்.

இந்த பொதுத்தேர்வால் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவர் என்பதால் இதற்கு பதிலாக மாநிலங்களே சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் பொது நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும் எனக்கோரியும் தமிழ்நாடு, காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள்  சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் சார்பில் வாதாடபட்டு வருகிறது

இந்த நிலையில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் , தமிழ் உள்பட 7 மாநில மொழிகளில் தேர்வு நடத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

ஜூலை 24 ந்தேதி நடைபெறும் 2 ம் கட்ட நுழைவுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களையும் அனுமதிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை அக்டோபர் 30 வரை நீட்டிடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top