இக்கட்டான சூழ்நிலையில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்

201605090717225901_Punjab--Bangalore-teams-clash-today_SECVPFகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் 9 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அரை சதம் அடித்ததுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டோனிஸ் பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பஞ்சாப் அணியில் அம்லா, விருத்திமான் சஹா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனாலும் அந்த அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் சிறப்பாக அமையாததால் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடியாமல் திணறி வருகிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு முந்தைய நிலையில் உள்ளது. பெங்களூரு அணியில் கேப்டன் விராட்கோலி ரன் குவிக்கும் எந்திரம் போல் செயல்பட்டு வருகிறார். அவர் இந்த சீசனில் 2 சதம், 4 அரை சதம் உள்பட 541 ரன்கள் குவித்துள்ளார். விராட்கோலியின் அதிரடி ஆட்டத்தால் (58 பந்துகளில் 108 ரன்) நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 192 ரன் இலக்கை (புனே அணிக்கு எதிராக) விரட்டி பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. நட்சத்திர பட்டாளங்களை கொண்ட பெங்களூரு அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருவது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்து வருகிறது.

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்ற இக்கட்டான சூழ்நிலையில் மோதும் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. சொந்த மண்ணில் ஆடுவதால் பஞ்சாப் அணிக்கு இந்த ஆட்டம் சற்று அனுகூலமாக இருக்கக்கூடும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top