ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

201605091337193359_Cong-members-stage-a-walkout-in-Lok-Sabha-protesting-PM-Modi_SECVPFதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சியினருக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டி பேசினார்.

ஊழல் செய்தவர்கள்மீது உரிய விசாரணை நடத்தி சிறையில் அடைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்து வருவதாக அவர்கள் கூச்சலிட்டனர்.

அவர்களை எதிர்த்து பா.ஜ.க., எம்.பி.க்களும் கூச்சலிட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

மேல்சபையிலும், இதே பிரச்சனையை மையப்படுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இதற்கு முன்னரும் அவையில் சிலமுறை விவாதங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் குறிப்பிடாத புதிய குற்றச்சாட்டை பிரதமர் இப்போது சோனியா காந்தியின்மீது சுமத்துவது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

சபாநாயகரின் இருக்கையை நோக்கி முற்றுகையிடச் சென்ற அவர்கள் அவையின் மையப்பகுதியில் நின்று நீண்ட நேரம் கூச்சலிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, பகல் 12 மணிவரையிலும், பின்னர் மேலும் பத்து நிமிடங்களுக்கும், அதன்பின்னரும் அமைதி திரும்பாததால் பிற்பகல் 2 மணிவரையிலும் மேல்சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top