ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் சிறைக்கு செல்வார்கள்: பிரதமர் மோடி பேச்சு

201605090454420236_Those-who-go-to-prison-for-bribery-in-the-helicopter-deal_SECVPFகேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளவும், அவர்கள் தண்டிக்கப்படவும் மக்கள் விரும்புகிறார்கள். இத்தாலி கோர்ட்டு தீர்ப்பால், லஞ்சம் கொடுத்தவர்கள் சிறைக்கு போய்விட்டார்கள். அதுபோல், லஞ்சம் பெற்றவர்களும் சிறைக்கு செல்வார்கள்.

இந்த வழக்குக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. லஞ்சம் பெற்றவர்களின் பெயரை நாங்கள் வெளியிடவில்லை. அது இத்தாலியில் இருந்து வெளியானது. இத்தாலியில் எனக்கு யாரையும் தெரியாது. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியதால், காங்கிரசார் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற போராட்டத்தை நடத்துகிறார்கள். ஜனநாயகத்துக்கு ஆபத்து இருப்பது இப்போதுதான் அவர்களுக்கு புரிந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top