சாதனையை முறியடித்த விராத் கோலி

Kohli

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோஹ்லி சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் இரு முறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்றகோஹ்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணிகோஹ்லியின் அதிரடி சத்தால் 19.3 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் 8 போட்டிகளிலேயே விளையாடி கோஹ்லி500 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருவது ஓவர் போட்டிகளில் தொடர் ஒன்றில் 500 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையை கோஹ்லிபெற்றுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top