10 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்கு ரூ.10 கோடியை அ.தி.மு.க. பதுக்கி வைத்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

201605081526248752_admk-10-crores-hoaring-every-constituency-before-10-months_SECVPFராமநாதபுரம், திருவாடானை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் இந்தப்பகுதியில் இருந்து வேலைக்குச் சென்ற 62 தமிழக மீனவர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களை மீட்க மோடி அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 23 நாட்டுப் படகுகள், 70விசைப் படகு களும் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லபபட்டு மீட்க நடவடிக்கை இல்லை.

அ.தி.மு.க. ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம். மதுவை ஒழிப்பது மட்டுமில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க. மதுபான ஆலைகளை மூட நடவடிக்கை எடுப்போம். கட்டிடங்கள், ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அது குறித்து ஆய்வு செய்வோம். காண்டிராக்டர்கள் முதல் கையெழுத்து போட்ட அதிகாரிகள் வரை தப்ப முடியாது. சகாயம் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பொது தணிக்கை கமிட்டி அமைத்து கட்டிட பணி, சாலை பணிகளை தொடக்கத்தில் இருந்து ஆய்வு நடத்துவோம்.

ஊழல் இல்லாத வகையில் திட்ட பணிகள் அமைக்க பாடுபடுவோம். மாணவர்களுக்கு கல்வி உதவி முழுமையாக ரத்து செய்துவிட்டு, மாதந்தோறும் நிதி உதவி வழங்கப்படும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

35 சதவீத வாக்குகள் எங்களிடம் உள்ளது.. 150 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். இது தேர்தலில் நிரூபிக்கப்படும். ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை இரண்டு கட்சிகளும் வாக்காளார்களுக்கு பணம் கொடுக்க போகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அ.தி.மு.க. வினர் தொகுதிக்கு ரூ.10 கோடி என 10 மாதங்களுக்கு முன்னரே பதுக்கி வைத்து விட்டனர்.

இதேபோல் தி.மு.க. தொகுதிக்கு ரூ.8 கோடி பதுக்கி உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது தேர்தல் ஆணையம் பிடித்த சரித்திரமே கிடையாது. நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. பணம் கொடுத்து நம்மை விலைக்கு வாங்க முயற்சி செய்கின்றனர் என்பதை இனம் தலை முறையினர் பெற்றோர்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top