தபால் வாக்குப்பதிவு தொடக்கம்: மே 14 வரை தபால் வாக்குகளை அனுப்பலாம்

vote_fb__largeசட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு, தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், தபால் மூலம் வாக்குரிமையை நிலைநாட்ட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று தொடங்கி வரும் 14ம் தேதி வரை தபால் மூலம் தேர்தல் அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர், ஆகியோர் தங்களது வாக்குகளை அனுப்பலாம் என தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top