வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

voters__largeவாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் மூலம் வாக்‌களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பில், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே‌போல், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களா‌ல் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top