ஹெலிகாப்டர் ஊழலை திசை திருப்பவே காங்கிரசின் பாராளுமன்ற முற்றுகை போராட்டம்: வெங்கையா நாயுடு

201605070940506163_Cong-rally-a-ruse-to-divert-focus-from-chopper-scam-Venkaiah_SECVPFஉத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, பாராளுமன்றம் முன்பு நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

அவர்கள் அனைவரையும் பாராளுமன்ற வீதி போலீசார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில், நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம், காங்கிரசின் இந்த போராட்டம் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘காங்கிரஸ் எங்கள் மீது கூறுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நகைப்புக்குரியவை. இதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை’’ என்றார். மேலும், மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்த காலகட்டத்திலேயே அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சித்ததாக குறிப்பிட்ட அவர், ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற போராட்டங்களில் காங்கிரஸ் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top