ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஜெகன்மோகன் ரெட்டி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்

201605061218129433_jagan-mohan-reddy-announces-protest-after-centre-denies_SECVPFஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதே வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டனர்.

ஆனால் இப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.

பாராளுமன்றத்தில் தெலுங்கு தேச எம்.பி. அவந்தி ஸ்ரீனிவாசவராவ் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வமாக மந்திரி ஜெயந்த் சின்கா பதில் அளிக்கையில், “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க சட்டத்தில் இடமில்லை” என்று பதில் அளித்தார்.

மத்திய மந்திரியின் இந்த அறிவிப்புக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வருகிற 10–ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜெகன்மோகன் கலந்து கொள்கிறார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வருகிற 8, 9–ந்தேதிகளில் அனந்தபுரம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top